இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!!

Read Time:2 Minute, 29 Second

201610060543234473_communication-satellite-gsat18-successfully-launched_secvpfஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.

இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக, இந்த செயற்கைகோள் ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணி 15 நிமிடங்களுக்குள் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விண்ணில் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட 32-அது நிமிடத்தில் செயற்கைகோளானது அதன் சுற்று வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராதான் என் பொண்டாட்டி – விறகுவெட்டி சொன்ன பகீர் தகவல்.!!
Next post லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி..!!