உங்கள் காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்..!!!
உறவுகள் என வந்து விட்டால், சில எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது கண்டிப்பான ஒன்றாகும்.
இது உங்கள் உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மட்டும் என இருக்கும் சில விஷயங்களையும் உறுதிப்படுத்தும்.
உங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அத்தகைய விஷயங்கள் எந்த காரணம் கொண்டும் உங்கள் காதலனிடம் சொல்ல வேண்டாம்.
சரி, இப்போது அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
உங்கள் தோழிகளின் ரகசியங்கள்
உங்கள் காதலனிடம் கண்டிப்பாக சொல்லக்கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
உங்களை நம்பி உங்கள் தோழிகள் உங்களிடம் அவர்களைப் பற்றிய ரகசியங்களை கூறியிருப்பார்கள். அதனை நீங்கள் ரகசியமாக வைத்திருக்கவும் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்)
உங்கள் கடவுச்சொல்லை கண்டிப்பாக உங்கள் காதலனிடம் கூறவே வேண்டாம்.
அவர் மீது அதிகமான நம்பிக்கை இருந்தாலும் சரி, வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அவர் மீது காதல் இருந்தாலும் சரி, கடவுச்சொல் போன்ற சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லக்கூடாது.
அவர் குடும்பத்தின் மீதான வெறுப்பு
இந்த ரகசியத்தை உங்களுக்குளே வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதை உங்கள் காதலனிடமோ அல்லது நண்பர்களிடமோ கண்டிப்பாக கூறாதீர்கள்.
உங்கள் காதலனின் தாய் அல்லது சகோதரிகளோடு உங்களுக்கு அனைத்து நேரத்திலும் ஒத்துப்போகாது. இதை அவரிடம் கூற வேண்டிய அவசியமில்லை.
இது அவரை வருத்தப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உறவையும் சீர்குலைக்கும்.
விரிவான உங்கள் கடந்த காலம்
பழைய காதலனைப் பற்றி தற்போதைய காதலனிடம் கூறினாலும், அந்த காதலைப் பற்றி விரிவாக கூற வேண்டாம்.
அதன் ரகசியத்தை காக்கவும். அதற்காக அவரை ஏமாற்றுகிறீர்கள் என்ற அர்த்தமில்லை. தேவையில்லாத பிரச்சனையை தான் தவிர்க்கிறீர்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating