ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம் தெரியுமா..!!

Read Time:2 Minute, 55 Second

201609301129079358_you-know-soon-led-to-bald-men_secvpfமுடி கொட்டுவது சாதாரணம் தான். அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணம். ஆனால் அதற்கும் அதிகமாக கொட்டினால் தான் பிரச்சனை. அதிலும் தற்போது பல ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதால், முடி அதிகமாக கொட்டும் போதே ஒருசில செயல்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான ஆண்கள் ஓயாமல் தங்களின் முடியை சீவுவார்கள். ஆனால் இப்படி ஓயாமல் சீவுவதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, தலைக்கு குளித்த பின்னர் டவல் கொண்டு கடுமையாக தலையை தேய்த்தால், வலுவிழந்து இருக்கும் முடி கையோடு வந்துவிடும்.

வேண்டுமெனில் உங்கள் கை விரல்களைக் கொண்டு தலைமுடியை சீவலாம். தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் ஸ்கால்ப் மற்றும் மயிர்கால்களை வலுவடையச் செய்துவிடும். முக்கியமாக ஹேர் ட்ரையரை எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடாது. ஹேர் ஸ்டைலிங் பொருட்களை முடி அதிகம் கொட்டும் போது பயன்படுத்தக்கூடாது.

இதனால் மேலும் முடி கொட்டும். அதுமட்டுமின்றி ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்தினால், வழுக்கை நன்றாக தெரியும். பெரும்பாலான ஆண்களுக்கு அடிக்கடி ஸ்டைல் என்று தொப்பி அணியும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தொப்பி அணிவதால், முடியில் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதிகமாக வியர்த்து ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படக்கூடும்.

இதனால் கொட்டும் முடியின் அளவும் அதிகரிக்கும். எனவே இவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முடி கொட்டுவது சாதாரணம் தான் என்று நினைத்து விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டால் நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். எனவே முடி கொட்டினால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்..!!
Next post பள்ளிகொண்டா அருகே தொல்லை கொடுத்த நாயை நரிக்குறவரை ஏவி சுட்டுக்கொன்ற கிராம மக்கள்..!!