எங்காவது மீன் விவசாயம் செய்யுமா?… இங்கு பாருங்க அந்த கண்கொள்ளாக் காட்சியை…!! வீடியோ

Read Time:2 Minute, 33 Second

fish_agree_001-w245சாதரணமாக வயல்வெளிகளில் நெற்பயிரை பயிருட்டு வளர்ப்பதை விட, மீன்களையும் சேர்த்து வளர்க்கும்போது, அதிக லாபமும் பலனும் விவாயிகளுக்கு கிடைக்கிறது.

சீனாவின் தெற்குப் பகுதிகள் வயல்வெளிகளில் நெற்பயிருக்கு தேக்கி வைத்திருக்கும் நீருடன் மீனையும் சேர்த்து வளரவிடுகிறார்கள். நீரில் வளரும் களை செடிகள் மீனுக்கு உணவாகின்றன. நீரின் அடிப்பகுதியிலும், மேல் பகுதியிலும் வளரும் களைசெடிகளையும் மீன்கள் உண்ணுகின்றன.

நத்தை, கொசு லார்வா மற்றும் பல்வேறு சிறு பூச்சி இனங்கள் போன்றவற்றையும் மீன்கள் உண்ணுகின்றன. பைடோபிலான்க்டன் போன்ற பாக்டீரியாக்க்களும் மீனுக்கு உணவாகின்றன. மீன் உண்ணும் இவை அனைத்தும் நீரில் இருக்கும் சத்துக்காக பயிரோடு போட்டியிடுபவை. அவற்றைத்தான் மீன்கள் உண்கின்றன.

அதேபோல மீனின் எச்சக் கழிவு பயிருக்கு சிறந்த உரமாகிறது. வேறு ரசாயன உரங்கள் தேவைப்படுவது இல்லை. மேலும், மீன்களை வளர்க்கும் வயல்களில் நைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்ததாய் உள்ளன. அடி மண் பகுதி மீனால் கிளறப்படுவதால் காற்றோட்டம் உள்ளதாய் மாறுகிறது.

அறுவடையின் போது பயிருடன் மீனும் கிடைக்கிறது. சராசரியாக சீனாவில் 67 லட்சம் டன் மீன்கள் வயல்களில் உற்பத்தி செய்யபபடுகின்றன. ரசாயனப் பயன்பாடு இன்றிய இந்தப் பயிர் வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு சீனாவின் கொடை என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!!
Next post தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்..!!