பாகிஸ்தான் நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு…!!

Read Time:1 Minute, 42 Second

201610011546552608_magnitude-55-earthquake-strikes-pakistan_secvpfபாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்வாத் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ. தொலைவில் 43.4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இதேபோல் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா…!!
Next post முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் மாளிகை அறிக்கையில் தகவல்…!!