இந்த உலகத்தை மாற்றியமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய செய்தி…!! வீடியோ

Read Time:2 Minute, 25 Second

philipains_001-w245உலகளவில் இன்று போதைப் பொருள் வியாபாரமும், பாவனையும் தலைவிரித்தாடுகின்றது. இதனை தடுப்பது போன்று பல நாட்டு அரசாங்கமும் பாவனை செய்கின்ற போதிலும் முற்றாக நிறுத்துவதற்காக எவரும் முன்வரவில்லை.

மாறாக தாமும் மறைமுகமாக போதைப் பொருள் வியாபாரத்தை தூண்டிவிட்டு பணம் பார்க்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மாறாக பொங்கி எழுந்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி.

அதாவது தான் ஜனாதிபதியானால் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பேன் என தேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்திருந்தார். மக்களும் அவரை அரியாசனம் ஏற்றிவிட்டனர்.

இப்போது அவர் விறுவிறுப்பான வேட்டையை ஆரம்பித்து கிளைமேக்ஸினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார். ஜனாதிபதியான சில நாட்களிலேயே 3,000 பேர் வரையான போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்றுள்ளார். அத்துடன் நிறுத்திவிடாது அவர்களின் பிணங்களை வீதியோரங்களில் வீசச் செய்து போதைப் பொருள் பாவனையாளர்களையும் பயமுறித்தி வருகின்றார்.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில் நான் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் ஹிட்டர் போன்று செயற்படுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது ஹிட்லர் 30 லட்சம் யூதர்களைக் கொன்றொழித்தார் அதே போல போதைப் பொருள் பாவனையை தடை செய்ய 30 லட்சம் வரையானவர்கள் என்றாலும் கொன்றொழிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இந்த பேச்சு யூத தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது ஆபத்தா?
Next post 18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை…!!