முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

Read Time:3 Minute, 19 Second

egg_001-w245முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா? என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

* தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.

* ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

* முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

* மஞ்சள் கருவில் விட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.

* முட்டையில் இயற்கையாகவே விட்டமின், ‘பி12’ மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன.

* இந்தச்சத்துகள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை.

* முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

* உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின், ‘டி’ முட்டையில் உள்ளது.

* அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.

* செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணூட்டச் சத்தும் முட்டையில் உள்ளது.

* மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

* இதய நோய், சர்க்கரை நோய் பிரச்சனை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.

* வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம்.

* கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட, ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை!! :அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பாகம் -87) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
Next post சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா…!!