ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் பெற வேண்டுமா? அப்ப இந்த 4-7-8 ட்ரை பண்ணுங்க…!!

Read Time:2 Minute, 49 Second

second_sleeping_001-w245உறக்கம் ஒன்று சீர்குலைந்து போனாலே மெல்ல, மெல்ல ஆரோக்கியம் நலம்கெட ஆரம்பித்துவிடும். நீங்கள் இதை கண்கூட பார்த்திருக்க முடியும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என கூறப்படுபவர்கள் ஏறத்தாழ ஒரு நோயாளி போல நிறைய குறைகள் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இதற்கு மாத்திரைகள் மூலம் தீர்வுக் காண நினைப்பது தவறு. மாத்திரைகள் உடல் நல கேடுகளுக்கு தற்காலிக தீர்வு தான் அளிக்கும். எனும் போது உறக்கத்திற்கு ஒருபோதும் நிரந்தர தீர்வாக அமையாது. ஆனால், மூச்சு பயிற்சி மூலம் இதற்கு நல்ல தீர்வு காணலாம்…

மூச்சு பயிற்சி!

மூச்சு பயிற்சி சரியாக செய்தாலே உடல்நலத்தை பேணிக்காக்க முடியும் என்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல உறக்கம் பெற வேண்டும். இந்த இரண்டும் ஒரே செயலில் கிடைத்தால் சிறப்பு தானே!

4-7-8 ட்ரிக்!

நான்கு நொடிகள் மூச்சை உள் இழுத்து, ஏழு நொடிகள் மூச்சை ஹோல்ட் செய்து, எட்டு நொடிகளில் மூச்சை விட வேண்டும். இதை சுழற்சி முறையில் சில நிமிடங்கள் செய்தாலே ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.

ஆக்சிஜன்!

4-7-8 ட்ரிக் உடலுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைக்க செய்கிறது. இதனால் மூளை அதிக ஆக்சிஜன் பெற்று சுறுசுறுப்பாக செயற்படும். மூளையில் மந்த நிலை இருந்தாலே நல்ல உறக்கம் பெற முடியும்.

அமைதி!

இந்த 4-7-8 ட்ரிக் மூச்சு பயிற்சி இயற்கையான முறையில் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் குறைத்து இலகுவாக உணர வைக்கிறது. நரம்பு மண்டலம் அமைதி நிலை அடைவதால் நீங்கள் எளிதாக ஆழ்ந்த உறக்கம் பெற முடியும்.

மூளை, இதயம்!

இந்த 4-7-8 ட்ரிக் மூளை மற்றும் இதய துடிப்பை சீராக்கி, உறக்கம் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும்ம், இது நுரையீரல் செயற்திறன் அதிக படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை: போலீசார் விசாரணை…!!
Next post மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது ஆபத்தா?