இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம்…!!
இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மூன்று தினங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்சிகிச்சை முகாம் என்பன கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படுகின்றது அதன் முதல் நாள் நிகழ்வானது நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிரதி சுகாதார அமைச்சரின் அனுசரணையில் நடைபெற்றது.
இச்சத்திர சிகிச்சையினை செய்வதற்கு கொரிய நாட்டு வைத்திய நிபுணர்கள், தாதிமார்கள், மற்றும் உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இங்கு தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் உரையாற்றுகையில்
இந்தப்பிரதேசத்தில் உள்ள நோயாளிகளின் பாரிய குறையை நிவர்த்தி செய்யுமுகமாக பிரதி சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மற்றும் இலவச கண்சிகிச்சை முகாம் என்பன கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்களால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இவ்வாரான இலவச பிளாஸ்க் சத்திரசிகிச்சை முகாம் இதுவே கல்முனை பிரதேசத்தினை பொறுத்தவரையில் முதலாவது வைத்திய சேவையாக அமைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும்.
இங்குள்ள நோயாளர்கள் வேறு பிரதேசங்களுக்குச்சென்றே சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே இன்று நடைபெறும் இந்த வைத்திய முகாமை பாரக்கவேண்டி இருக்கின்றது. கொரிய நாட்டு வைத்திய நிபுணர்களில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கு இரண்டு விசேட வைத்திய நிபுணர்களும், கண்சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒரு வைத்திய நிபுனரும் அவர்களுடன் கொரிய நாட்டு தாதிமார்களும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் நிமலறஞ்சன், மயக்க மருந்து நிபுணர் தேவகுமார், மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிமார்கள் ஏனைய ஊழியர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற சிகிச்சையின் போது பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கு 105 நோயாளிகள் பார்வையிடப்பட்டு 5 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் கண் நோயாளிகள் 50 பேரை பார்வையிட்டு 8 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது இம்முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating