லெபனானில் முன்னேறிச்செல்லும் இஸ்ரேல் டாங்கிப்படை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லா ராக்கெட் வீசித்தாக்குதல்

Read Time:3 Minute, 50 Second

Israel.map.1.jpgலெபனானின் மீது விமானத்தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தரைப்படைத் தாக்குதலை விரிவுபடுத்தியது. அதன்படி லெபனான் எல்லையில் இருந்து கிறிஸ்தவ நகரங்களை நோக்கி முன்னேறியது. அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலின் டாங்கிப்படைகள் மீது ராக்கெட்டுகள் வீசித்தாக்குதல் நடத்தியது. 11 டாங்கிகளை தாக்கி அழித்து விட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துஉள்ளது.

விரிவுபடுத்த

லெபனான் நாட்டின் மீது கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி முதல் இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்புக்கான மந்திரி சபைக்கூட்டத்தில் லெபனானில் தரைப்படைத்தாக்குதலை விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெபனானின் எல்லையில் இருந்து இஸ்ரேல் தரைப்படை முன்னேறியது.

டாங்கிகள் லெபனானின் கிறிஸ்தவ நகரமான மரிஜயோன் நோக்கி முன்னேறின. அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசித்தாக்கினர். மோர்ட்டார் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் 2 டாங்குகள் தீப்பற்றி எரிந்தன. அதைத்தொடர்ந்து 15நிமிடத்துக்கு ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். இதில் 11 டாங்கிகள் தகர்க்கப்பட்டதாக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அறிவித்தனர்.

55 பேர் பலி

மரிஜயோன் நகரை நெருங்கும் வரை அவர்கள் எதிர்ப்பின்றி முன்னேறினர். பல கிராமங்களைக் கடந்து சென்றனர். எந்த இடத்திலும் அவர்கள் முகாமிடவில்லை. தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 15 இஸ்ரேலியர்கள் பலியானதாகவும் 40 ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

இதற்கிடையில் தரைப்படை தாக்குதலை விரிவுபடுத்தியபிறகு தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேல் தீர்மானித்து உள்ளது. போர் நிறுத்த முயற்சிகளுக்கு வழிவிடுவதற்காக இந்த முடிவை அது எடுத்து உள்ளது. தெற்கு லெபனானை கைப்பற்றுவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்கள் எல்லையில் அமைதி நிலவவேண்டும். அதுவே எங்கள் விருப்பம் என்று இஸ்ரேல் மந்திரி ரபி ஐட்டான் கூறினார்.

உடன்பாடு ஏற்படவில்லை

இதற்கிடையில் சமரசத்திட்டத்தில் அரபுநாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப திருத்தம் செய்ய சம்மதித்த அமெரிக்காவும், பிரான்சும் திருத்தம் செய்வது தொடர்பான தீர்மானத்தில் உடன்பாடு காணமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கில் புகழ்பெற்ற மசூதி அருகே மனிதகுண்டு வெடிப்பு: 30 பேர் சாவு
Next post இலங்கையின் வடகிழக்கில் மீண்டும் கடும் மோதல்கள்