சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…!! வீடியோ

Read Time:4 Minute, 12 Second

ghost_girl_001-w245மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன.

Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் பிணமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது.

Barrera அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து Barrera அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த பேயை சமாதானப்படுத்தும் விதமாக அடுத்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து ‘chinampas’ என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிட்டு வந்துள்ளார்.

அவ்வாறு கட்டி விடப்படும் பொம்மைகளின் குரல்கள் கேட்பதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர்.

தற்போது அந்த பகுதி சுற்றுலா தளம் போல் பிரபலமடைந்து விட்டதால், சாகச விரும்பிகள் பலரும் அந்த இடத்துக்கு சென்று பொம்மைகளை மரங்களில் கட்டுகின்றனர்.

சுற்றுலாவாசிகள் தாங்கள் மரத்தில் கட்டும் பொம்மைகளிடம் இருந்தும் வினோத சத்தங்களை உணர்வதாகவும், அந்த காட்டில் உள்ள பொம்மைகள் தங்களை பார்ப்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Barrera அந்த சிறுமி இறந்த பகுதியில் இருந்து வெகு தூரம் தங்கியிருந்தாலும், அமானுஷ்ய குரல் மற்றும் நடக்கும் சப்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பேய்களை சமாதானப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பல பொம்மைகளை அந்த காட்டின் மரங்களில் அலங்கரித்து வந்துள்ளார்.

பின்னர் ஒருநாள், அந்த சிறுமி இறந்து கிடந்த அதே கால்வாயில் அவரும் இறந்து மிதந்துள்ளார். இதனை அவரது உறவினர்களில் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரது இறப்பு இந்த விடயத்தை பல ஊர்களுக்கும் தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த தீவு பகுதியினை காண ஏராளமானோர் வரத்தொடங்கியுள்ளனர்.

அந்த தீவு பகுதி இருக்கும் இடத்தில் பெரும் அமைதி நிலவுவதாகவும், அங்குள்ள செடி கொடிகள் முதல் நெடிதுயர்ந்து நிற்கும் அனைத்து விதமான மரங்களிலும் பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்தும் விதவிதமான பொம்மைகள் முழுமையாகவோ உடைந்த நிலையிலோ இருக்கின்றன.

சுற்றுலாவாசிகளே அங்கு பேய்களின் குரல்கள் கேட்பதாக நம்பி வருவதால் ஆண்டுதோறும் “பொம்மைகளின் தீவு” பிரபலமடைந்து கொண்டே வருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?
Next post மனைவியை கொலைசெய்து விட்டு உடலை எரித்த கணவன் – 17 வருடங்களின் பின் மரண தண்டனை…!!