சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை ; சாட்சிக்கு அச்சுறுத்தல்…!!

Read Time:4 Minute, 20 Second

images-65-300x166சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரினால் அக் கொலை வழக்கின் சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்ற சட்டத்தரணி கிருஸ்ணவேணி அது தொடர்பிலான நகர்த்தல் பத்திரம் ஒன்றினையும் மன்றில் சமர்ப்பித்துள்ளார்.

சுக்காம் பொலிஸாரினால் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சி.சுமுன் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கும் 26 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து 8 பொலிஸ் உத்தியோகஸ்தரால் அவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வழக்கு இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. இதன்படி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திலும், கொலை வழக்கு அவருடைய சடலம் மீட்கப்பட்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இருப்பினும் முதற்கட்ட வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் தோண்றிய சட்டத்தரணி கிருஸ்ணவேணி குறித்த கொலை வழங்கின் சாட்சியாளர், தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும், இக் கொலை வழக்கின் 8 எதிரிகளில் ஒருவருமான பொலிஸ் உத்தியோகஸ்தரினால் அச்சுறுத்தப்படுகின்றார் என்பதை நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

குறிப்பாக அவர் தனது பிள்ளைகளை தனியார் நல்வி நிலையங்களுக்கு (ரியூசன்) கூட்டிக் சென்று வரும் வேளைகளில் சாட்சியாளரை பின் தொடர்ந்தும் வருகின்றார். தனது பிள்ளையை தனியார் கல்வி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது அச்சுறுத்தும் வகையில் பின் தொடர்கின்றார்.

மேலும் வீதிகளின் அவரைக் காணும் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் கைக்சினை றேஸ் செய்து அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொள்ளுகின்றார் என்று தெரியப்படுத்தியிருந்தார்.

மேலும் இவ் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி நகர்வுப் பத்திரம் ஒன்றினையும் மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீ பரவல்…!!
Next post இரு பெண்கள் அதிரடி கைது…!!