நாம்தான் மக்களுக்காக என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்-இசையாளன்
நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்காக கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் “காஸ்ரோ” படையணியின் பொறுப்பாளரான இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி…
கொழும்பும் அதன் சுற்றுப்புறமும் பாகாப்பற்ற சூழலில் இருக்கும் பொழுது கொழும்பு அலுவலகம் திறப்பதன் அவசியமென்ன?
கொழும்பும் அதனை அண்டிய பகுதிகளும் பாதுகாப்பு அற்ற நிலையில் பெரும் பதட்டமாகத்தான் இருக்கின்றது. ஆனால் தொடர்ந்து இருப்பதில்லை. எப்பொழுது விடுதலைப் புலிகளினால் வைத்த குண்டு வெடிக்கின்றதோ அல்லது திட்டமிட்ட புலிகளின் தற்கொலைத்தாரர்களின் குண்டுவெடிக்கின்றதோ அப்பொழுதும் தான் எல்லாமே ஸ்தம்பித்து போய்விடும் ஆனால் அந்த ஸ்தம்பிதம் நீண்டநேரம் எற்படுவதில்லை. பதட்டம் ஓரிரு மணித்தியாலம் தான் பின்னர் மக்கள் வழமையாக தமது சேவைகளில் ஈடுபட்டவண்ணம் இருப்பார்கள். இதேபோல் தான் நாமும் எமது சேவைகளில் அக்கறை காட்டியவர்களாக இருக்கப் போகி;ன்றோம்.
அப்படியானால் உங்களுக்கு என்ற ஒரு பாதுகாப்பு இருக்கின்றதா?
இலங்கையில் வாழும் தமிழருக்கு மட்டுமல்ல மற்றைய மக்களுக்கும் பாதுகாப்புக் கிடையாது தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மாவிலாறு பிரச்சனையை மக்கள் அறிவார்கள் தானே. இப்படியான அநாவசியமற்ற பிரச்சனைகளை வன்னிப்புலிகள் தொடக்கி மக்களின் அமைதியான வாழ்க்கையை குழப்பி சமூகத்திற்கு சீரழிவை ஏற்படுத்துவது தான் அவர்களுக்கு சர்வசாதாரணமாகப் போய்விட்டது ஆனால் கொழும்பில் இப்படி நடக்காது என்று யாராலும் கூறமுடியாது. நாங்கள் மக்களுக்கு மனதால் சேவை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். மகத்தான மனிதநேயத்துடன் சேவைகளைச் செய்கின்ற எமக்கு எதிரிகளினால்; ஒரு மரணம் தேடிவந்தால் அதுவே எம்மக்களின் முன்னேற்றத்தின் படியாக அமையும் என்று இருந்தால் யாரால் தான் என்ன செய்ய முடியும்? ஆகவே பாதுகாப்பு என்பது எமக்காக இல்லை நாம்தான் மக்களுக்காக என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்
இதனால் நீங்கள் என்னத்தைச் சாதிக்கப் போகின்றீர்கள்?
நாங்கள் எத்தனையோவற்றை தமிழருக்கு சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் தான் விடுதலையில் சேர்ந்தோம், வன்னிப்புலிகளுடன் இயங்கினோம். ஆனால் எப்பொழுது ஐனநாயகத்தை வன்னிப்புலிகள் குழிதோன்றிப் புதைத்தார்களோ அப்பொழுதே அவர்களை விட்டு விலகிக்கொள்ள முயற்சிசெய்து கொண்டிருந்தோம் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் விலகிவிட்டோம். ஆனால் தற்பொழுது மக்களுக்கு ஐனநாயக முறையில் எமது சொந்த பாதையில் நடக்கின்றோம் இதனால் வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் பாதிக்கப்பட்ட அத்தனை தமிழர்களுக்கும் எம்மால் எத்தனையோ உதவிகளைச் செய்யது எமது கனவுகளை நிலைநாட்ட முடியும் என்பது உறுதி.
இன்றைய சூழலில் வடக்கு-கிழக்கு இணைப்புக் குறித்த உங்களின் கருத்து என்ன?
என்கருத்து வித்தியாசமாகத்தான் இருக்கும். நிச்சயமாக வடக்கு-கிழக்கு இணைவதில் எந்தவித ஈடுபாடும் எனக்கு இல்லை ஆனால் இது எனது சொந்தக்கருத்து. காரணம் நமது ஐனநாயக வழியை புலிகள் கடந்த 30வருடங்களாக மழுங்கடித்துக் கொன்டார்கள் என்றுதான் கூறமுடியும் ஆனால் நான் தனிப்பட்ட இயக்கம் இல்லை நான் இன்று மக்களால் மதித்து நடக்கும் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் அங்கத்தவன் ஆதலால் எமது தலமை என்ன எண்ணுகின்றதோ அதன் வழி செல்ல நானும் தயார் என்பது தான் தற்போதைய பொதுக்கருத்தாகும்
வன்னிப்புலிகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
நாங்கள் ஒருபொழுதும் சகோதரப் படுகொலைகளை ஆதரித்தவர்கள் இல்லை அப்படியான எண்ணமே எமக்கும் இல்லை ஆனால் வன்னிப்புலிகள் எம்மை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் இன்னும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் நாமாக வலியச்சென்று தாக்க விரும்புவதில்லை.
(இடைமறித்து) அப்படியாயின் எதற்காக வன்னிப்புலிகளின் தளங்களையும் மற்றும் முகாம்களையும் குறிவைத்துத் தேடிச்சென்று தாக்குகின்றீர்கள்?
சரியாகச்; சொன்னீhர்கள்!; நமது புலனாய்வுப் பிரிவுகளின் மூலம் எம்மை அழிக்க திட்டம் செய்து கொண்டு இருக்கும் பொழுது தான் நாங்கள் புலிகளை தாக்கி அவர்களின் முகாம்களை அடியோடு அழிக்கின்றோம் முக்கியமாக பனிச்சங்கேணி முகாமை அப்படிதான் செய்தோம். அரசியல் ரீதியாகச் செயல்படும் எமக்கு இராணுவரீதியான பலமும் வேண்டும். ஆந்தரீதியில் எம்மைத் தாக்க முயலும் வன்னிப்புலிகளை எந்தநேரத்திலும் எங்கும் தயங்க மாட்டோம்.
வெளிநாடுகளில் வாழும் எமதுதமிழ் இதயங்களுக்கு என்ன சொல் விரும்புகின்றீர்கள்.?
நான் அவர்களுக்கு எதையும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள் அந்நாடுகளில் வாழும் மக்கள் அல்லது அரசு எப்படியான ஐனநாயகத்தை விரும்புகின்றது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அதேபோல் நாம் தற்பொழுது எடுத்து வரும் ஐனநாயகம் காக்க எம்மோடு இருந்து நாம் எம்மை அறியாது விடுகின்ற தவறுகளை எமக்கு தக்க தருணத்தில் எடுத்து உணர்த்தி எமது வழியைச் செம்மை செய்தால் அதுவே பெரிய உதவி இதுவே எமக்கு அவர்கள் அளிக்கும் பெரும் சொத்தாகும். மக்கள் தமக்கு இருக்கும் குறைகளை எமக்கு எடுத்து தெரிவித்தால் நாம் அதை உடனே செம்மையாக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் அவர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் அறியத்தருகின்றோம். இத்தோடு எம்செயலை மக்களுக்கு வெளிப்படுத்த முன்வந்த நிதர்சனம்.நெற் இணையத்தள நிர்வாகத்தைச் சேர்ந்த உங்களுக்கும் உங்களின் நண்பர்களான மற்றைய ஊடகங்களுக்கும் எனது சார்பிலும் எமது தமிழீழமக்கள் விடுதலைப் புலிகள் சார்பிலும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்த போர்சூழலிலும் எமக்காக எம்மோடு இருந்து எந்தவித கலக்கமும் இன்றி மக்களுக்காக தந்த செவ்விக்கு எமது நன்றி. –நிதர்சனம்.நெற்…