உடலுறவு கொண்டால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்…!!
ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை உடலுறவின் மூலம் அடைவார்கள். இப்படி உடலுறவு கொள்வதால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம். அதிலும் வாழ்நாளில் இருந்து 10-8 வருடங்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாம். எப்படியெனில் உடலுறவு கொள்வதால், நம் உடலின் கலோரிகள் குறைக்கப்பட்டு, அதனால் வாழும் நாட்களின் அளவு அதிகரிக்கப்படுகிறது.
அதிலும் உடலுறவின் போது நாம் செய்யும் மற்றும் நாம் உணரும் ஒவ்வொன்றின் மூலமும் வாழ்நாளின் அளவு அதிகரிக்கும்.
ஆய்வு ஒன்றில் உடலுறவு கொள்வதால், ஹார்மோன்களின் அளவு சீராகி, இதய ஆரோக்கியம், மூளையின் சக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்றவை அதிகரிப்பதாக சொல்கிறது.
அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் உடலுறவில் எவ்வளவுக்கு எவ்வளவு உச்ச நிலை இன்பத்தை உணர்கிறோமோ, அந்த அளவில் வாழ்நாளின் அளவும் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சரி, இப்போது உடலுறவில் ஈடுபடுவதால் எப்படி வாழ்நாளின் அளவு அதிகரிக்கும் என்று பார்ப்போம்…
உச்சக்கட்ட இன்பம்
வெறுமனே உடலுறவு கொள்வதால் மட்டும் வாழ்நாளின் அளவு அதிகரிக்காது. நாம் உடலுறவு கொள்ளும் முறையைப் பொறுத்தே உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவது என்பது, உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும் ஒரு மருந்திற்கு இணையானது.
மேலும் இப்படி உடலுறவு கொள்வதால், நோயெதிர்ப்பு சக்தி 20% வரை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வேறு சில ஆய்வுகளின் படி, திருமணமாகாமல் தனித்து வாழ்பவர்களை விட, திருமணமாகி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
அதிலும் தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபட்டால், வாழ்நாளில் இருந்து 8 வருடங்கள் வரை அதிகரிக்கும்.
கொஞ்சி விளையாடுதல்
துணையுடன் கொஞ்சி விளையாடுவதன் மூலம், உடலில் இருந்து ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியேற்றப்படுகிறது. இந்த ஹார்மோனுக்கும் வாழ்நாளின் அளவு அதிகரிப்பதற்கும் நிறைய தொடர்புள்ளது.
எப்படியெனில் துணையுடன் அடிக்கடி கொஞ்சி விளையாடுவதால், நாள்பட்ட நோய்கள் மற்றும் மன இறுக்கம் போன்றவை வருவது தடுக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உடலுறவு கொண்ட பின்னர் பலர் உறங்கி விடுவார்கள்.
ஆனால் உடலுறவு கொண்ட பின்னர் தூங்காமல், கொஞ்சி விளையாடினால், அது வாழ்நாளில் இருந்து 7 வருடங்களை அதிகமாகுமாம்.
பாலுணர்ச்சியூட்டும் உணவுப் பொருட்கள்
பாலுணர்ச்சி தூண்டப்பட்டால், உடலுறவில் நன்கு ஈடுபட முடியும்.
அப்படி பாலுணர்ச்சி அதிகம் தூண்டப்பட்டு உடலுறவில் ஈடுபடும் போது மூளையில் இருந்து டோபமைன், அசிடைல்கோலின், காபா மற்றும் செரோடோனின் போன்ற கெமிக்கல்கள் வெளிவரும்.
இப்படி வெளிவரும் கெமிக்கல்களால் உடலின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு, உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கிவிடும்.
இப்படி எவ்வித பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருந்தால், வாழ்நாளின் அளவு அதிகரிக்கும் தானே.
ஆகவே உணவில் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகளை உட்கொண்டு, உடலுறவு கொள்ளும் போது சிறப்பாக செயல்பட்டு, வாழ்நாளில் 10 வருடங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
வியர்த்தல்
உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வோம். அப்படி உடற்பயிற்சி செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, தசைகள் நன்கு வலிமையடைந்து, முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும்.
எப்படி உடற்பயிற்சி செய்வதால், இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதோ, அதேப்போல் உடலுறவில் ஈடுபடும் போதும் இவ்வளவு நன்மைகளும் கிடைக்கும்.
சொல்லப்போனால் 20 நிமிடம் உடலுறவில் ஈடுபட்டால், இரத்த ஓட்டம் மற்றும் மெட்டபாலிசம் அதிகரித்து, 30 கலோரிகள் கரையும்.
அதுமட்டுமின்றி, நடுத்தர வயது பெண்கள் வாரம் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டு வந்தால், எலும்புகளைப் பாதுகாக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் இருமடங்கு அதிகமாகும்.
மேலும் ஒரே நிலையில் உடலுறவு கொள்ளாமல், வித்தியாசமான நிலையில் உடலுறவில் ஈடுபட்டால், வாழ்நாளில் 10 வருடங்கள் அதிகமாகுமாம்.
குறிப்பு..
வாரத்திற்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால், ஹார்மோன்கள் சீராக சுரக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளை நன்கு செயல்படும்.
அதிலும் ஆண்கள் வாரத்திற்கு 3 முறைக்கு மேல் உடலுறவு கொண்டால், 50% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம்.
மேலும் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்தால், எண்டோர்பின்கள் வெளிப்பட்டு, மன அழுத்தம் நீங்கி, வாழ்நாளில் 2 வருடங்கள் அதிகமாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating