பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்…!!

Read Time:6 Minute, 3 Second

download-9-615x413-585x393தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை.

பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றியும், உடலமைப்பு பற்றியும் கவலைப் படுவதில்லை.

ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண்களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந்தையை பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

தழும்புகள் மறைய

கர்ப்பமாக இருக்கும் போது விரிவடையும் தசைகள் பிரசவத்திற்குப் பின்னர் சுருங்குகின்றன. ஒரு பெண்ணின் தாய்மையை உணர்த்துவதே இந்த தழும்புகள்தான். பெண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், தோல், தொடை பகுதிகளிலும் தழும்புகள் ஏற்படுகின்றன. கர்பமாக இருக்கும் போதே அரிக்கத் தொடங்கும். அந்த இடத்தில் உடனே கைகளால் அரிப்பதைவிட மென்மையான துணிகளைக் கொண்டு அந்த இடத்தை ஒத்தடம் தரலாம். மேலும் பாதாம் எண் ணெய், கிரீம் போன்ற வைகளை அரிக்கும் இடத்தில் தடவினால் தழும்புகள் ஏற்படாது.

கருவளையக் கண்கள்

பச்சிளம் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற கவனத்தில் தாயின் தூக்கம் பறிபோகிறது. இதனால் கண்களைச் சுற்றி கரு வளையம் போன்றவை ஏற்படுகின்றன. இது அதிக சோர்வை ஏற்படுத்துகின்றன. எனவே வைட்டமின் கே பற்றாக் குறையினால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. எனவே சத்தான உணவுகளையும், சீரான உறக்கத்தையும் மேற்கொள்ளவேண்டும் .

கூந்தல் உதிர்வு

கர்பகாலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதிலேயே இழந்து விடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர் கறது. எனவே இரும்புச் சத்துள்ள காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும்.

கூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும். கர்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப்பெண்களுக்கு பிரச்சினை. இக்காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

வறண்ட சருமம்

கர்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில்செதி லாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மைய டையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும்போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்ற வைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

பித்த வெடிப்பு

நீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி உடை அணிந்து வந்த கங்கனா ரணாவத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்…!!
Next post முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?