சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கச் செய்யும் ஃபேஸியல் மாஸ்க்…!!

Read Time:2 Minute, 39 Second

facial-585x439உடலில் கொலாஜன் உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தாலும், குறிப்பிட்ட வயதில் இதன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் சீக்கிரம் சுருக்கங்கள் வந்துவிடும். போஷாக்கின்றி சரும வயதாவது தொடங்கி விடும்.

கொலாஜன் உற்பத்தி குறைவதற்கு தவறான உணவுபழக்கம், ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய ஆரோக்கியமான புரோட்டின் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அதோடு கொலாஜனை தூண்டும் இந்த ஃபேஸியல் மாஸ்க்குகள் உங்களின் இழந்த இளமையை மீட்டுத் தரும்.

வெள்ளரி + முட்டைக் கரு மாஸ்க் :

முட்டையின் வெள்ளைக் கருவை அடித்துக் கொள்ளுங்கள். அதில், வெள்ளரிச் சாறு, மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தேய்த்து, காய விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். மாற்றங்களை கவனிப்பீர்கள்.

கேரட் + கொய்யா மாஸ்க் :

அரை கேரட் மற்றும் அரை கொய்யாப்பழம் எடுத்து துண்டுகளாக்கி மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.

அவகாடோ மாஸ்க் :

தேன் – 1 டீஸ் பூன்

அவகாடோ அரைத்தது – 1 டீ ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன்

இந்த மூன்றையும் கலந்து முகத்தில் தேய்த்து, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் மிருதுவாக இளமையாக இருக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு கொண்டால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்…!!
Next post மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம்…!!