உடல் எடை வேகமாக குறைய என்ன செய்ய வேண்டும்?
உலகில் ஒவ்வொரு வருடமும் உடல் பருமனால் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதில் குழந்தைகள், இளம் வயதினர் தான் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு உண்ணும் உணவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ஒருவர் உண்ணும் உணவுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். அது என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒருவர் தன் அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
இங்கு உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பின்பற்றி, உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
பழக்கம் #1
எண்ணெயில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாறாக எலுமிச்சை ஜூஸ், ஸ்மூத்திகள், ஃபுரூட் சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
பழக்கம் #2
தினமும் காலை எழுந்தது முதல் இரவில் படுக்கும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.
பழக்கம் #3
ஃபாஸ்ட் புட் உணவுகள், பிட்சா, பர்கர், வறுத்த உணவுகள், டின் உணவுகள், இனிப்புப் பதார்த்தங்கள், ஹாட்-டாக்ஸ், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
பழக்கம் #4
தினமும் வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
பழக்கம் #5
தினமும் ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன் 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
பழக்கம் #6
தினமும் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அளவான உணவை எடுத்து வாருங்கள். குறிப்பாக நீங்கள் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும், வயிறு முற்றிலும் நிரம்ப சாப்பிடாமல், அளவாக உட்கொள்ள வேண்டும்.
பழக்கம் #7
உணவு உண்ணும் போதும், உணவு உட்கொண்ட பின்னரும் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
பழக்கம் #8
சூப், பால் போன்றவற்றை அதிகம் எடுக்க வேண்டும். அதாவது எடையைக் குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, அந்த டயட்டில் 25-30% நீர்ம உணவுப் பொருட்களாகவும், எஞ்சியவை திட உணவுப் பொருட்களாகவும் இருக்க வேண்டும்.
பழக்கம் #9
முக்கியமாக காபி, பாட்டில் ஜூஸ், குளிர் பானங்கள், மது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
பழக்கம் #10
இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பசியை உணர்ந்தால், அப்போது ஒரு டம்ளர் பால் அல்லது சிறிது பழக்கங்களை சாப்பிடலாம்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ளதை சாதாரண வழிகளாக நினைக்க வேண்டாம். உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இவற்றை மனதில் வைத்து பின்பற்றி வந்தால், வேகமாக உடல் எடைக் குறைவதைக் காண்பதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதையும் நன்கு காணலாம்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating