நுளம்புகளை விரட்டும் தொலைக்காட்சி..! இலங்கையில் அறிமுகம்…!!

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90இலங்கையில் தற்போது பெரும் சவாலுக்குரிய விடயமாக டெங்கு நோய் மாறியுள்ளது. அதன் தீவிரம் மக்களை வெகுவாகவே அச்சமடைய செய்துள்ளது எனலாம்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரா அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல சட்ட நடவவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது நுளம்புகளை விரட்டியடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சியொன்றை பிரபல நிறுவனம் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் சுகாதாரத்தை பாதிக்கும் வகையிலான எந்தவொரு வேதியப்பொருட்களும் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தவில்லை என அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த தொலைக்காட்சியானது இயங்கியதும் அதிலிருந்து சப்தமில்லாது வெளியாகும் கதிர்கள் சுற்றியுள்ள நுளம்புகளை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்திவிடும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, அண்மைய காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயாள் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, யாழப்பாணம், மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைதீவில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா…!!
Next post தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” பேரணி இன்று முன்னெடுப்பு…!!