தினமும் மது போதையில் தகராறு: குடிகார கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி…!!
சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இவரது மனைவி நிர்மலா தேவி (38). மகன்கள் லோகேஸ்வரன் (22), லோகப்ரியன் (12). இவர்களில் லோகேஸ்வரன் என்ஜினீயரிங் முடித்துள்ளார். லோகப்ரியன் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
திருமணமான நாளில் இருந்தே ரவிச்சந்திரன் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இது நிர்மலாதேவிக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவர் ரவிச்சந்திரனை கண்டித்து வந்தார். ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை.
தினமும் மாலையில் போதை தலைக்கேறும் அளவுக்கு குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதையே ரவிச்சந்திரன் வாடிக்கையாக வைத்திருந்தார். மகன்கள் இருவரும் பெரியவர்களாகி விட்டார்கள்.
இனியாவது குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள் என்று நிர்மலாதேவி ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் மனைவியின் பேச்சை கேட்காமல் ரவிச்சந்திரன் அலட்சியமாகவே இருந்தார்.
குடித்து விட்டு வீட்டுக்கு சென்று மனைவியுடன் தினமும் தகராறிலும் அவர் ஈடுபட்டார்.
நேற்று இரவு 8.30 மணி அளவில் ரவிச்சந்திரன் வழக்கம் போல குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் ஆத்திரமூட்டும் வகையில் பேசி செயல்பட்டார். இதனால் நிர்மலாதேவி பொறுமையை இழந்தார்.
அவர் வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து, கணவர் என்றும் பாராமல் சரமாரியாக ரவிச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கினார்.
இதில் வலி தாங்க முடியாமல் ரவிச்சந்திரன் அலறினார். ஆனால் நிர்மலா தேவியோ வெறி கொண்டவர் போல உருட்டுக்கட்டையால் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கினார்.
இதில் ரவிச்சந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் முகமும் சிதைந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இந்த நேரத்தில் மகன்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். அவர்கள் வேறு ஒரு அறையில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக வெளியில் வரவில்லை.
ரவிச்சந்திரனின் அலறல் சத்தம் அதிகமான பின்னரே மகன்கள் லோகேஸ்வரனும், லோகப்ரியனும் வந்து பார்த்தனர்.
தந்தை ரவிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரவிச்சந்திரனை காப்பாற்ற முடியவில்லை. அவரது உயிர் பிரிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ஜெகநாதன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நிர்மலாதேவி போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.
குடி, குடியை கெடுக்கும் என்பார்கள் அந்த வகையில், ரவிச்சந்திரனின் குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.
தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு காரணமான தாய் சிறைக்கு செல்கிறார். 2 மகன்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating