முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள்…!!
முதல் நாள் ஜிம்மில் சேர்ந்தால் அல்லது திடீரென்று ரன்னிங், வாக்கிங் மேற்கொண்டால், பெரும்பாலானோர் கடுமையான முழங்கால் வலியால் அவஸ்தைப்படுவார்கள். இந்த வலிக்கு சில வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பர். ஆனால் இப்படி மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உட்கொண்டால், அதனால் பல விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.
எனவே எப்போதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் மருந்து மாத்திரைகளின் மூலம் நிவாரணம் பெறாமல், இயற்கை வழிகளை நாடினால், சீக்கிரம் அந்த வலியில் இருந்து விடுபடுவதோடு, ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
இங்கு முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் வழி தான் மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடியது.
கற்பூர எண்ணெய்
கற்பூர எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டுக்களில் உள்ள சிரமத்தில் இருந்து நிவாரணம் வழங்கும் மற்றும் எரிச்சலைக் குறைக்கும். கற்பூர எண்ணெய் தயாரிப்பதற்கு, 1 டீஸ்பூன் கற்பூர பொடியை ஒரு கப் சூடான தேங்காய் எண்ணெயில் போட்டு, குளிர வைக்கவும். பின் அந்த எண்ணெயைக் கொண்டு தினமும் வலியுள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஓமம்
ஓமத்தில் உள்ள மயக்க மருந்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் முழங்கால் வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் உள்ள அழற்சியைப் போக்க வல்லது. அதற்கு ஓமத்தை கையால் நசுக்கி, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, வலியுள்ள இடத்தில் தடவினால், முழங்கால் வலி வேகமாக மறையும்.
விளக்கெண்ணெய்
முழங்கால் வலி இருப்பவர்கள், விளக்கெண்ணெயை சூடேற்றி, அதனை வலியுள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, பின் காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து, அதனைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், மூட்டுகளில் உள்ள உட்காயங்களில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகளின் உற்பத்தி தூண்டப்பட்டு, வலி குணமாகும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள், உடலில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் வழங்கும். அதிலும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் வலி மறையும்.
ஐஸ்கட்டி
முழங்கால்களில் கடுமையான வலியை உணரும் போது, அவ்விடத்தில் ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு ஒத்தம் கொடுத்தால், வலி குறைவதோடு, அப்பகுதியில் இருக்கும் வீக்கம் மற்றும் உட்காயம் குறைந்து, வேகமாக வலியில் இருந்து விடுபடலாம்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating