பற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்…!!

Read Time:3 Minute, 32 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான்.

நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைமை உருவாகும்.

ஆனால் அதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பளிச்சிடும் வெண்மையான பற்களை பெற இதோ சூப்பரான டிப்ஸ்!

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ள வேண்டும். பின் டூத்பிரஷை தண்ணீரில் நனைத்துக் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்ப வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் நீங்கி வெண்மையாக பளிச்சிடும்.

ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு நிமிடம் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும். பின் குளிர்ந்து நீரில் ஒரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கரைகள் நீங்கிவிடும்.

டென்டல் பிக் எடுத்துக் கொண்டு பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில், ஈறுகளில் படாமல் தேய்க்க வேண்டும்.

தினமும் காலையில் ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.

தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி-ல் விட்டமின் C இருப்பதால், இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் இந்த பழங்களின் தோலை பொடி செய்து தேய்த்து கொடுப்பதால் கடினமாக இருக்கும் மஞ்சள் கரை போய்விடும்.

சிட்ரிக் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் தோல்கள் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் தன்மைக் கொண்டது. எனவே அதன் தோல்களை பொடி செய்து பற்களில் தேய்த்து வந்தால், மஞ்சள் நிறமுடைய பற்கள் வெண்மையாக மாறும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்கானிக்கிற்கு நடந்த கொடூரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்…!! வீடியோ
Next post செல்போன் தீப்பிடித்தது: சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பீதி…!!