அபாய கடல்…!!
நடிகை கார்மென் எலெக்ட்ரா
இயக்குனர் கிரிஸ்டோபர் ரே
இசை கிறிஸ் ரிடென்ஹோவர்
ஓளிப்பதிவு ஸ்டுவர்ட் பிரேரேட்டன்
விமர்சிக்க விருப்பமா?
கல்லூரி பேராசிரியர்களான சார்லி ஓ கார்னலும், கார்மென் எலெக்ட்ராவும் தங்களது மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு தீவுக்கு ஜாலியாக டூர் செல்கிறார்கள். நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது, இவர்கள் பயணித்த கப்பல் திடீரென்று பழுதாகி விடுகிறது. அப்போது அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அவர்களால் அது முடிவதில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைக்கையில், இவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், தூரத்தில் ஒரு தீவைப் பார்க்கும் இவர்கள், அங்கிருந்து ஏதாவது உதவி கிடைக்காதா? என்ற எண்ணத்தில் ஒரு சில மாணவர்கள் மட்டும் கடலில் குதித்து அந்த தீவை அடைகிறார்கள். அந்த தீவில் யாருமில்லாததால், அங்கு பழுதாகி கிடக்கும் சிறிய படகை சரிசெய்து, அதை எடுத்துக் கொண்டு இவர்கள் வந்த கப்பலை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது கடலுக்குள் இருந்து இரண்டு தலை கொண்ட சுறா ஒன்று அந்த மாணவர்கள் பயணித்த சிறிய படகை தாக்கி, மாணவர்களை கடித்து கொன்றுவிடுகிறது. இதனால், பயந்துபோன மற்றவர்கள், அந்த சுறாவிடமிருந்து தப்பிக்கும் வழியை யோசிக்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த சுறா, சத்தத்தை வைத்துதான் தாக்குதல் நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டு, அந்த சுறாவை திசை திருப்பி, தாங்கள் வந்த கப்பலை சரிசெய்து தப்பிக்க போராடுகிறார்கள்.
சுறாவின் பிடியில் இருந்து அவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ஆழ்கடலுக்குள் சுறாவிடம் மாட்டித் தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வெளிவந்துவிட்டது. இந்த படத்தை வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக இரட்டை தலையுடன் சுறா இருப்பதுபோன்று கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் வரும் சுறா பொம்மையை போல் இருப்பது தெரிகிறது. அதற்காக படக்குழுவினர் பெரிதாக இதற்கு மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது.
படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சுறாவின் மேற்புற செதில் மட்டுமே தெரிகிறது. மற்ற இடங்களில் சுறாவின் வாய் மட்டுமே தெரிகிறது. இரட்டை தலையுடன் சுறாவை முழுமையாக பார்க்கவே முடியவில்லை. படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. எப்போது சுறா தாக்கும் என்ற அச்சம் இருந்தாலும், சுறா வந்து தாக்கும் இடங்களில் நமக்கு பயமே இல்லை.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டிலேயே மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்திருப்பதால் அதற்கேற்றார்போல்தான் படமும் இருக்கிறது.
மொத்தத்தில் ‘அபாய கடல்’ அச்சமில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating