கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு…!!

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட தடகவியல் பொலிசாரால் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகைதந்த பகுப்பாய்வு குழுவினர், தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 125 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்போது 100 கடைகள் முற்றாக எரிந்ததோடு, ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன

தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், விபத்திற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் தற்போது பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தீவிபத்து வெள்ளிக்கிழமை நடைபெற்று உள்ளமையால் குறித்த தினத்தில் கடைகளில் விளக்கு வைத்து வழிபடுவது வழக்கம் அதனால் குறித்த தீவிபத்து ஏற்ப்பட்டிருக்குமா அல்லாது மின் ஒழுக்கினால் தீவிபத்து நடைபெற்று இருக்குமா அல்லது யாரும் தீவைத்திருப்பார்களா என்ற பல கோணங்களில் பகுப்பாய்வினையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறு செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை…!!
Next post எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!!