யாரெல்லாம் சோடா ட்ரிங்க்ஸ் அறவே குடிக்கக் கூடாது?

Read Time:3 Minute, 8 Second

15-1455534427-5differencebetweenhealthyandunhealthycalories-585x439சாதாரணமாக நாம் உணவருந்தினால் அருகே தண்ணீர் வைத்துக் கொள்வோம். ஆனால், மெல்ல, மெல்ல அந்த தண்ணீர் சோடா பானங்களாக மாறி வருகின்றன. சிலர் ஃபேஷனாக நினைத்தும், சிலர் உணவை செரிக்க உதவும் என்றும் தவறாக எண்ணி அருந்தி வருகின்றனர்.

ஆனால், சோடா பானங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அபாயமானவை. தொடர்ந்து நீங்கள் இதை குடித்து வர நாள்பட நீரிழிவு, உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் இதய நோய்களில் இருந்து ஆண்மை குறைபாடு வரை உண்டாகலாம்.

நீரிழிவு நோயாளிகள்!

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சோடா பானங்களை குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஏனெனில், கோலா, பெப்சி போன்ற அனைத்து வகை சோடா பானங்களிலும் செயற்கை இனிப்பூட்டிகள் செர்க்கபப்டுகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும்.

உடல் பருமன்!

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடல் எடை குறைக்க நினைபவர்கள் சோடா பானங்களை தவிர்க்க வேண்டும். இவற்றில் கலக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் அதிக கலோரிகள் கொண்டவை. இவை, உடலில் அதிக கொழுப்பு சேர, இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க காரணியாக இருக்கின்றன.

கர்ப்பிணி பெண்கள்!

கர்ப்பிணி பெண்கள் சோடா பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். இது அவர்களது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

கருத்தரிக்க விரும்புவோர்

குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் தம்பதிகள் சோடா பானங்களை தவிர்த்துவிடுங்கள். இதனால் அதிகரிக்கும் உடல் பருமன், மற்றும் உடலில் சேரும் சர்க்கரை அளவு கருவளத்தை பாதிக்கக் கூடியது.

குழந்தைகள் / முதியவர்கள்!

வளரும் குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்கள் சோடா பானங்களை எக்காரணம் கொண்டும் பருகவேண்டாம். இவை நாள்பட உங்கள் ஆரோக்கியத்தில் தீய மாற்றங்களை மிக வேகமாக உண்டாக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் புகுந்து, புலிகள் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 85) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
Next post கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பிச் சென்ற கைதி…!!