யாழ். சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…!!

Read Time:2 Minute, 25 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

குறித்த நால்வரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

குறித்த 4 மீனவர்களையும், 113 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டமும், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 40 நாட்களாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 4 மீனவர்களும் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறந்த கணவனாக திகழ நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!!
Next post ஏறாவூர் இரட்டைக்கொலை! சூத்திரதாரியுடன் மேலும் இருவர் கைது! நகைகளும் மீட்பு…!!