நன்மைகள் ஆயிரம் செய்வோம்..!! (கட்டுரை)

Read Time:3 Minute, 56 Second

c0111224புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்.

💮 புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை.

“சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்.”

💮 உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.

“உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.”

💮 மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்.

“இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது.”

💮 ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்.

“இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்.”

💮 அரசியல்வாதியின் கல்லறையில்,

“தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது.”

💮 ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.

“இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்.”

இவ்வளவு தானா வாழ்க்கை❓

ஆம் அதிலென்ன சந்தேகம்.

ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓

நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?

ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.

பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.

பிறரை வாழ வைத்து வாழ்வோம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்..!!
Next post சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா… புதுப் படம் ரிலீஸ் செய்த அதிமுக பிரமுகர்..!! (வீடியோ)