கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும்..!!
கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல் உண்டாகும். நீர் வழிந்து கொண்டேயிருக்கும். காற்று பட்டால் எரியும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும். உடனடியாக வறண்ட கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் அது எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். கண்களை பாதித்து விடும்.
தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது, அல்லது டிவி பார்க்கும்போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்துவிட்டால், இதனால் போதுமான திரவம் கண்களில் சுரக்காமல் போய்விடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.
அது தவிர்த்து, கண்களில் கண்ணாடி அணிவதால், கண்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், அல்லது மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி ஆகியவற்றாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.
அதேபோல் மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் கண்களில் வறட்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றத்திற்கும், கண்களின் வறட்சிக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொற்று வியாதிகள் :
கண்கள் வறண்டு போவதால் எளிதில் தொற்று ஏற்பட்டுவிடும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் சிரமம் உண்டாதல் ஆகியவை உண்டாகும். ஆகவே கண்களில் வறட்சி ஏற்பட்டால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
வறட்சியிலிருந்து பாதுகாக்க :
உங்கள் கண்கள் வறண்டிருந்தால், உடனடியாக நிவர்த்தி செய்துவிடுங்கள். செயற்கை கண்ணீர் சிகிச்சையின் மூலம் கண்களுக்கு ஈரப்பதம் அளிக்கலாம். ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், முட்டை, கேரட், மற்றும் நட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை கண்களில் திரவம் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கண்களில் எண்ணெய் சுரப்பும் தூண்டப்படும். இதனால் கண்களின் எரிச்சல் குறையும்.
புகை தூசு ஆகியவை கண்களில் படாமலிருக்க கண்ணாடி அணிவது நல்லது. வறட்சி குறையாமலிருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் கண்களை பாதிக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating