உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் நீதிபதி மா.இளஞ்செழியன் என்ன சொல்கிறார்?..!! (வீடியோ செய்தி)
யாழில் நீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்
ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் கொழும்புக் கம்பன் கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் முன்னாள் நீதியரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மண்ணுக்காகவே போராடியது மகாபாரதம். பெண்ணுக்காகப் போராடியது இராமாயணம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதி தவறினான். கண்ணகி மதுரை மாநிலத்தினை எரித்தாள். பசுமாடு நீதி கேட்டு மனுத்தாக்கல் செய்த போது மனு நீதி கண்ட சோழன் மனு நீதி வழங்கினான்.
யாழ்ப்பாணத்தில் நீதி வேண்டி ஓடிய காட்சிகள் அண்மையில் அரங்கேறியது. அதனை விட ஜனாதிபதியிடம் காலில் விழுந்து மனுக் கொடுத்த காட்சிகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புக் கூறத் தவற வேண்டாம். ஏனெனில், அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்…. அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்த ஒரு சம்பவமாகத் தான் நான் காணுகின்றேன்.
படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடு உள்ளவர்கள் யாழ்ப்பாணம் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறுபவர்கள் ஆகியோர் அமைதியாகத் தான் இருந்தார்கள். நீதிகள் வீதியில் இறங்கும் போது மக்கள் அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள். பிரச்சினைகள் வருவது இயற்கை. அதில் தவறு இல்லை. ஆனால், பிரச்சினையினைக் கையாளும் விதம் முக்கியமானது. அனைவரும் இதனை உணரவேண்டும் என நீதித் துறை பாசறையிலிருந்து அறைகூவலாக விடுக்கின்றேன்.
சட்டத்திற்கு, சட்டவாட்சி நிலைகூறும் நீதிக்கு முக்கியத்துவமளித்து அவற்றிற்குத் தலை வணங்கும் புதிய யாழ்ப்பாணத்தினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.
நன்றி-அதிரடி இணையம்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating