கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க…!!

Read Time:3 Minute, 51 Second

news_25-03-2016_0ff-400x211-615x324சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே காலங்காலமாக சருமத்தைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஓர் பொருள் தான் கடலை மாவு. சோப்பைப் பயன்படுத்தாமல் கடலை மாவைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது கடலை மாவைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் நிறைய நன்மைகளை பெறலாம்.

* சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் உண்டாகும் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

* கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.

* கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அதனைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

* முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

* பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால் தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

* உங்களுக்கு கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க கடலை மாவு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கரும்புள்ளிகளைப் போக்க கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், கடலை மாவைக் கொண்டு அன்றாடம் முகத்தைக் கழுவுங்கள்.

* சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.

கடலை மாவு இயற்கைப் பொருள் என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம். இது 100% சுத்தமானது. எனவே அதிக செலவு செய்து கெமிக்கல் கலந்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா? – பாபி சிம்ஹா விளக்கம்..!!
Next post குழந்தையின்மை பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை முறை அவசியம்..!!