டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு…!!

Read Time:2 Minute, 40 Second

201609161553401750_dengue-chikungunya-deaths-health-ministry-seeks-report-from_secvpfதலைநகர் டெல்லி உட்பட நாடுமுழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தலைமையில் இன்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.

கூட்டத்திற்கு முன்பு இது தொடர்பாக டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் பேசிய நட்டா, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் 12,255 பேர் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கர்நாடகாவில் மட்டும் 8,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 839 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 492 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் டெங்கு காய்ச்சல் நோயால் 6 பேர் டெல்லியில் பலியாகினர். நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!
Next post 103வது பிறந்தநாளை சரக்கடித்து கொண்டாடிய மூதாட்டி… ஆரோக்கியத்தின் ரகசியம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! வீடியோ