மீண்டும் கலவர பூமியாக மாறப்போகும் பெங்களூர்! உளவுத்துறை எச்சரிக்கை…!!

Read Time:3 Minute, 8 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நாள் தோறும் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்பின் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி காவிரி நதி நீர் குறித்து மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அதற்கு முன்னதாக 19ஆம் திகதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற உள்ளது.

குறித்த தினத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஒன்று தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பு கூறப்படலாம்.

ஒருவேளை, கர்நாடகாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் கர்நாடகாவில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பதட்டமான பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் உளவுத்துறை கூறியுள்ளது.

குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…!!
Next post கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்…!!