முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்…!!

Read Time:3 Minute, 29 Second

acne-615x430-585x409பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு, அவர்களில் பெரும்பாலானோர் முகப்பருவைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

பருவ வயதில் மட்டும் ஏன் இந்த முகப்பரு தோன்றுகிறது என்றால், அந்த வயதில் மட்டும் தான் உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவு சுரக்கும். இவ்வாறு அதிகமாக சுரக்கும் எண்ணெய், முகங்களின் ரோமக்கால்களின் வழியாக வெளியேறும் போது அவை முழுமையாக வெளியேற வழியில்லாமல் தடைப்பட்டு முகப்பருவாக உருமாறுகிறது.

இந்த பருக்களை நகத்தால் கீறினாலோ, அழுக்குத் துணியால் முகத்தை துடைத்தாலோ இன்பெக்ஷன் ஏற்பட்டு முகப்பரு கட்டிகள் ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ பெயர் ‘அக்னே’ எனப்படும். இதை 4 கட்டங்களாக பிரிக்கிறார்கள்.

முதலில் புள்ளிகள் போல 4, 5 பருக்கள் முகத்தில் தோன்றுவது, முகப்பருவில் சீழ்பிடித்து கட்டி வரத் தொடங்குவது, அவை பெரிதாகி மிக கடினமாக மாறிவிடுவது, இவை மேலும் முற்றிவிட்ட நிலையில் எவ்வித கிசிக்சையும் எடுக்காமல், முகப்பருவை கிள்ளிக் கொண்டே இருந்தால் 4வது கட்டமாக முகத்தில் ஏராளமான நிரந்தர தழும்புகள் வந்துவிடும்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க எண்ணெய், வெண்ணெய், நெய், கொழுப்பு, இனிப்பு, காரம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. உணவில் அதிக அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகப்பரு வந்த பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினாலே போதும்.
ஒரு நாளைக்கு 4 முறை முகத்தை கழுவ வேண்டும். எந்த சோப்பையும் உபயோகிக்கலாம். ஆனால் அது ஒரே சோப்பாக தொடர்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு சோப்பிலும், ஒருவித கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கும்.

நாம் சோப்பை அடிக்கடி மாற்றினால் முகத்தோல் அந்த கெமிக்கல் கலவைகளால் பாதிக்கப்படும். இவற்றை முறையாக செய்தாலே முகத்தில் பரு என்பதே தோன்றாது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…!! வீடியோ
Next post ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?