அஜித்தின் பாலிசியை பின்பற்ற தகுதி வேண்டும்: ஜெய்க்கு தயாரிப்பாளர் சிவா அறிவுரை…!!
அஜித் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை என்பதை பாலிசியாகவே கடைபிடித்து வருகிறார். அவரது பாலிசியை தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் கடைபிடித்து வருகின்றனர். அதில் நடிகர் ஜெய்யும் ஒருவர்.
ஜெய், சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கிடையாது. சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகத்தின் படக்குழுவினர் சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா அவருக்கு அறிவுரை வழங்கும்விதமாக மேடையில் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, அஜித் முன்பெல்லாம் அவருடைய படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்ளாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. ஆனால், அவர் புரோமோஷன்களில் கலந்துகொள்ளாததற்கு காரணம் எனக்கு விளங்கியதுபோது, அவர் எடுத்ததுதான் சரியான முடிவு என்று எனக்கு பட்டது. அந்த முடிவை அவர் உச்சத்தில் வந்தபிறகுதான் எடுத்தார்.
ஆனால், தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும் அவரது பாலிசியை பின்பற்றுவதாக கூறி, படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்வது கிடையாது. அஜித்தின் பாலிசியை பின்பற்றுவதற்கு அவர்களுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதியை அவர்கள் வளர்த்துக் கொண்டபிறகு அதை பின்பற்றுவதில் தவறில்லை என்று கூறினார்.
அப்போது, பத்திரிகையாளர்களில் ஒருவர் சிவாவை பார்த்து, நீங்கள் ஜெய்யை மனதில் வைத்துதான் இதை சொல்கிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, சிவா, அவரைத்தான் நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஜெய் எனக்கு தம்பி மாதிரி, அவருக்கு அண்ணனாக இந்த அறிவுரையை சொன்னதாக இருக்கட்டும் என்று பேசி வைத்தார். சிவாவின் இந்த பேச்சு பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating