நேற்று வவுனியா வைத்தியசாலையில் ஓர் சம்பவம்…!!

Read Time:2 Minute, 19 Second

downloadநேற்று(13.09.2016) காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பை ஏற்படுத்தி வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் நோயாளருடன் அதிக நேரம் உரையாடிக்கொண்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து அங்கு சென்ற பொலிசார் வைத்தியசாலை பொலிசாருடன் தொடர்புகொண்டு வினவியதுடன் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்களிடம் பொலிசார் சம்பவத்தினை தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்கள் தொடர்பை ஏற்படுத்திய நபர் யார் எனத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். எனினும் விசாரணையினை மேற்கொள்வதாக தெரிவித்துவிட்டு பொலிசார் அங்கிருந்து அகன்றுவிட்டனர்.

இச்சம்பவம் அங்கு பணிபுரியும் வைத்தியர்களை மேலும் உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாகவும் நோயாளருடன் வைத்தியர்கள் அதிக நேரம் செலவு செய்தே அவர்களின் நோய்க்கு வைத்தியம் செய்யவேண்டும், எனவே வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன்…!!
Next post திருடிய நகையை அதே கடையில் விற்க முற்பட்டவர் கைது…!!