ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த மனைவியை வாங்குவதற்கு 57 பேர் முன்வந்தனர்..!!
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் யோர்க் ஷ யர் பிராந்தியத்தைச் சேர்ந்த சிமோன் ஓ’கேன் எனும் இந் நபர், தனது மனைவி லியான்ட்ராவை ஏலத்தில் விற்பனை செய்வதாக, பிரபல ஏல விற்பனை இணையத் தளமான ஈபேயில் தெரிவித்திருந்தார்.
கடந்த புதன்கிழமை ஒரு வேடிக்கையாக இந்த விபரீத அறிப்பை சிமோன் ஓ’கேன் விடுத்திருந்தார்.
எனினும், இரு தினங் களில், 65,880 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா) வரையான விலைக்கு லியாண்ட்ராவை ஏலத்தில் வாங்குவதற்கு 57 பேர் முன்வந்திருந்தனர்.
33 வயதான சிமோன் ஓ’கேன், லியாண்ட்ரா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ‘யூஸ்ட் வைஃப்’ எனும் தலைப்பின் கீழ் இவ்வறிவிப்பை சிமோன்’ஓ கேன் விடுத்திருந்தார்.
விற்பனையாகும் ‘பொருளின்’ சிறந்த அம்சங்களாக சிறந்த உடலமைப்பு மற்றும் சமையல் திறமை ஆகியன குறிப்பிடப் பட்டிருந்தன.
மோசமான விடயங்கள் எனும் பிரிவில், ‘இது அடிக்கடி சத்தமிடும். புத்தம் புதிய மின்னும் உலோகப் பாகங்களை (தங்க நகை?) வாங்குதற்கு ஓடர் கொடுக்கும் வரை இதை அமைதியாக்க முடியாது.
சிலவேளை இதன் சமையல் திறமை உங்களை வைத்தியசாலையில் கொண்டு போய்விடும்’ என சிமோன் குறிப்பிட்டிருந்தார். ‘இளம் மொடல் ஒன்றுடன் மாற்றீடு செய்வதற்கும் தயார்.
ஒரு தடவை வாங்கினால் ரிட்டர்ன் செய்ய முடியாது’ எனவும் அவர் குறிப் பிட்டிருந்தார். இந்த விளம்பரம் சிமோனின் மனைவி லியான்ட்ராவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
27 வயதான லியான்ட்ரா இது குறித்து கூறுகையில், ‘எனக்கு அவரை கொல்ல வேண்டும் போல் இருந்தது. வேலைத்தளத்தில் அனைவரும் இந்த விளம்ப ரத்தை பார்த்து சிரித்தனர்.
அவர் என்னை விற்பனைக்கு விட்டது மாத்திரமல்லாமல், இதற்காக ஒரு மோசமான புகைப்படத்தையும் பயன்படுத்தியிருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விளம்பரம் சில தினங்களில் நீக்கப்பட்டது.
இது குறித்து சிமோன் ‘ஓ கோன் கூறுகையில், “எனக்கு சுகயீனம் ஏற்பட்டபோது, அவர் என் மீது அனுதாபம் கொள்ளாததால் வேடிக்கையாக இந்த அறிவிப்பை விடுத்தேன்.
‘லியான்ட்ராவை உண்மையில் விற்பனை செய்ய நான் எண்ணவில்லை. அவர் மிகவும் நல்லவர்” எனத் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating