பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்…!!

Read Time:3 Minute, 14 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பேருந்துடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த 7 பேரில் 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதனால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து உறவினரின் மரணச்சடங்கிற்கு சென்று திரும்பிய யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறிப் பலியாகினர்.

குறித்த விபத்தில் நெல்லியடி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது – 78) ப.பொன்னம்மா (வயது – 75) ப.நந்தமூர்த்தி (வயது – 43) ஆகியோரும் அவர்களின் உறவுப்பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவருமே விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

பச்சிலைப்பள்ளி பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாயிருந்தனர்.

விபத்துச் சம்பவம் குறித்து பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதி தப்பியோட்டம்: பொலிஸார் நால்வர் பணிநீக்கம்…!!
Next post ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் பலி..!!