200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதி…!!
யாழ்.மாவட்டத்தில் உள்ள கந்தரோடை என்னும் பகுதிக்கான குடிநீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்குள்ள 200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இக் பகுதியில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் பிள்ளையார் நலன்புரி நிலையத்தில் உள்ள 49 குடும்பங்களும் இதனால் மிக மோசமான பாதிப்புக்களுக்க முகம் கொடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் திருமி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தாத்தன், அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கந்தரோடைப் பகுதியில் உள்ள பிள்ளையார் நலன்புரி நிலையத்தின் தலைவர் எஸ்.சிவஞானத்தினாலேயே மேற்படி விடயம் தொடர்பாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- கந்தரோடை ஜே.199 கிராம சேவகர் பிரிவின் கீழ் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இதுவரை விடுவிக்கப்படாத காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த 49 குடும்பங்கள் வாழ்கின்றார்கள்.
இங்கு வாழ்பவர்களுடைய காணிகள் இதுவரையில் விடுவிக்கப்படாத காரணத்தினால் அவர்கள் தற்காலிகமாக பிள்ளையார் நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகின்றார்கள்.
இங்கு வாழ்பவர்களுக்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நீர் விநியோகத்திற்காக மாதாந்தம் ஒவ்வொரு குடும்பம் 50 ரூபா வீதம் செலுத்துகின்றனர்.
இதே போன்று குறித்த கிராம சேவகர் பிரிவில் உள்ள 200 குடும்பங்களுக்கும் இது போன்று பணத்தினைச் செலுத்தியே குடிநீரினைப் பெற்று வருகின்றார்கள்.
முகாங்களில் வழுகின்ற மக்களுக்கு அங்கு சொந்த காணிகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் அப் பகுதிகளில் உள்ள காணி உரிமையாளர்களுடைய பெயரிலேயே தமக்காக நீர் விநியோகத்திற்கான பணத்தினையும் செலுத்தி வந்தவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் குறித்த பகுதிக்காக ஒட்டுமொத்த நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்கு நீர் இன்றி நாங்கள் மிகுந்த கஸ்ரங்களுக்கு முனம் கொடுக்கின்றோம்.
நீர் விநியோகத்திற்கான பணத்தினை செலுத்தவில்லை என்ற காரணமும் கூறப்பட்டது. முகாங்களில் வாழுகின்ற நாங்கள் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் நேரடியாக பணத்தினை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
வுhழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்ட நாங்கள் இன்று முகாங்களில் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம் என்று கூறி எமக்காக குடிநீர் விநியோகத்தினை பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தில் ஆராய்ந்து முதற்கட்டமாக அவர்களுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறும், இது தொடரப்hக உயர் அதிகாரிகளுடன் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
Average Rating