இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்…!!

Read Time:3 Minute, 15 Second

snake_guard_002-615x461-585x439சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.
மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விதைகள் வயிற்றுக்கு உபாதைகளை ஏற்படுத்தும்.

முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.
புடலங்காயில், புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புசத்து 0.3 கிராமும், ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.

புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ்(Alkalayts), கிளைகோஸைட்ஸ்(Glycocytes),ப்ளேவனாய்ட்ஸ்(Flavanoids) மற்றும் ஸ்டிரால்ஸ்(Steroids) ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.

எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.
புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.
இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதி…!!
Next post படப்பிடிப்பின் போது முத்தம் : கதாநாயகன் கன்னத்தில் அறைந்த நடிகை..!!