சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்…!!

Read Time:4 Minute, 5 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட 27 வயதுடைய மாணவன் நோய் நிலைமை காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவன் ஏதேனும் மருந்து வகையொன்றை உட்கொண்டதன் மூலம் மரணித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த மாணவன் நேற்று உடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

கொழும்பு பல்கலைக்கழக மாணவனின் கடிதம் தொடர்பில் தகவல்

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவன் எழுதி வைத்துள்ள கடிதம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடிதமானது 10 பக்கங்களைக் கொண்டதுடன், ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஹரிந்த செனவிரத்ன என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.

இதேவேளை குறித்த மாணவன் இரண்டு தடவை தனது வைத்திய பட்டத்திற்காக பரீட்சைகளுக்கு தோற்றிய போதும் இரண்டு தடவைகளிலும் மாணவரால் பரீட்சையில் சித்தியடைய முடியாமல் போயிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ‘தான் வாழ்க்கையில் மிகவும் விரக்தியை எதிர்நோக்கியுள்ளதாகவும், தனது சடலத்தை தனது பெற்றோருக்கு மாத்திரம் காண்பிக்குமாறும், பின்னர் சடலத்தை கடலில் வீசுமாறும் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் ஒரு அறையில் இரண்டு மாணவர்கள் வீதம் தங்கியிருந்த நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்த அறையில் குறித்த மாணவன் மட்டுமே தங்கியிருந்ததாகவும், அறையில் துர்நாற்றம் வீசியதை அடுத்தே குறித்த அறையை திறந்து பார்த்த போதே மாணவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவனின் சடலத்துக்கு அருகில் சேலைன் போத்தல் ஒன்றும், ஊசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!
Next post தேநீரை மாணவன் மீது ஊற்றிய சங்கீத ஆசிரியருக்கு பிணை..!!