தேசிய அரசாங்கம் 2020 வரை தொடரும் ; இனவாதிகளுக்கு இடமில்லை..!!
தேசிய அரசாங்கம் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 2020 ஆம் ஆண்டிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் அதுவரையில் இன்றைய அரசு தொடரும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இனவாத கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடமில்லையென்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியுடனான இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுவரை தொடரும். நாடு கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை பொருளாதார நெருக்கடியிலும் வீழ்ந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து இணக்கப்பாட்டு தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆட்சி தொடரும். 2020 ஆம் ஆண்டில் மீண்டும் தேசிய அரசை ஏற்படுத்துவதா இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
அப்போது இடம்பெறும் தேர்தலில் ஐ.தே.கட்சி தனித்து போட்டியிடும். அதே போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்தே போட்டியிடும்.
அதன் பின்னர் தனித்து ஆட்சியமைப்பதே சுதந்திரக் கட்சியின் இலக்காகும்” 2020 வரை இணைக்கப்பாட்டு அரசு தொடரும். எனவே புதிய கட்சி ஆரம்பிக்க நினைப்போரும் சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்போரும் கட்சியில் இணையலாம். அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச் சின்னத்தில் போட்டியிடும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளன. அதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இனவாதக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்துக் கொள்ளப்படமாட்டாது.
இனவாதிகளுக்கு எமது முன்னணியில் இடமில்லை என்றார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating