போட்டியின் போது நடுவர் தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்…!!

Read Time:2 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்று வரும் குத்துச்சண்டை போட்டிகளில் போட்டி நடுவர்ஒருவர் குத்துச்சண்டை வீரர் ஒருவரை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இலக்கான மாணவன் கண்டியில்அமைந்துள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற குறித்த போட்டியின் போது போட்டியின் நடுவராக கடமையாற்றியவர் போட்டியின் இடையில் குறித்த மாணவனுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

போட்டியின் இடைவேளையின் போது குறித்த போட்டியாளர் தனது பயிற்சியாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது நடுவரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து குறித்த நடுவருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நடுவருக்கு இரண்டு வருடங்களுக்கு போட்டி தடைவிதிப்பதற்கு குத்துச்சண்டை சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…!! வீடியோ
Next post கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர என்ன காரணம் தெரியுமா?