கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர என்ன காரணம் தெரியுமா?

Read Time:2 Minute, 50 Second

84721e69-dd5d-4f6b-9441-25fce9c8e43e_s_secvpf-615x461-585x439திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்.

மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும் எதிர்பார்ப்புக்கள், அதிகப்படியான அன்பு மற்றும் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களால் தான் வருகிறது. இங்கு கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான சில பொதுவான விஷயங்களை பார்க்கலாம்.

• வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு முதன்மையான காரணம் மாமியார். இந்த காரணம் தான் பெரும்பாலான வீடுகளில் சண்டை வருவதற்கு முதன்மையாக உள்ளது.

• இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நிறைய தம்பதிகளால் ஒருவருடன் ஒருவர் போதிய நேரத்தை செலவழிப்பதில்லை என்று சண்டைப் போடுகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் இது தான் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

• ரொமான்ஸ் இல்லாமை தம்பதியர்களுள் ஒருவர் ரொமான்ஸாக அருகில் வரும் போது, புரிந்து கொண்டு, ரொமான்ஸ் செய்யாமல், சோர்வாக உள்ளது என்று சொல்லி, அவர்களை புறக்கணிப்பதால், தற்போது பலருக்கு சண்டைகள் வருகின்றன.

• சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் சண்டைகள் வரும். அதில் பெரும்பாலான ஆண்கள் குழந்தைகளை கவனிப்பது பெண்களின் பொறுப்பு என்று நினைக்கின்றனர். ஆனால் பெண்களோ, கணவன், மனைவி இருவருமே சரிசமமாக கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருக்க, தம்பதியர்களுக்குள் சண்டைகள் எழாமல் என்ன செய்யும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போட்டியின் போது நடுவர் தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்…!!
Next post மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும்! பிரதமர் வாழ்த்து…!!