டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளீதரன் சாதனை

Read Time:2 Minute, 44 Second

MURALITHARANSLANKA.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன். தூஸ்ரா பந்து வீச்சில் தூள் கிளப்பி விக்கெட்டை அதிகமாக அள்ளி வரும் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் முரளீதரன் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் 10 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய வீரர் என்ற தனது உலக சாதனையை முரளீதரன் நேற்று சமன் செய்தார்.

இதற்கு முந்தைய டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய முரளீதரன் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த டெஸ்டில் 11 விக்கெட்டும், பர்மிங்காமில் நடந்த டெஸ்டில் 10 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.

இதேபோல் 2001-02-ம் ஆண்டில் முரளீதரன் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி உலக சாதனை படைத்து இருந்தார். அதாவது அந்த ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டும், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 11, 10 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இந்த உலக சாதனையை படைத்தார்.

34 வயதான முரளீதரன் 657 விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே 685 விக்கெட்டுகள் கைப்பற்றி உலக சாதனையாளராக விளங்குகிறார்.
MURALITHARANSLANKA.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ் பணியாளர்கள் படுகொலை : ஐ.நா. கடும் கண்டனம்!
Next post கொழும்பில் குண்டுவெடிப்பு: 3பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நா.உ. உட்பட 4 பேர் படுகாயம்