காலை உணவை தவிர்க்காதீங்க ப்ளீஸ்….!!

Read Time:2 Minute, 6 Second

morning_food_001-w245காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகைத்தலின் ஆபத்து அறியாதவர்களுக்கு இதோ ஒரு சூப்பர் டெமோ…!! வீடியோ
Next post பயணிகளுடன் விபத்தை சந்திக்கவிருந்த படகு…. நொடிப்பொழுதில் தப்பித்த அதிர்ச்சி தருணம்…!! வீடியோ