ஒருதலைக்காதலில் பலியான நர்சு உடல் இன்று அடக்கம்: விருத்தாசலத்தில் பதட்டம்-போலீஸ்குவிப்பு…!!

Read Time:6 Minute, 12 Second

201609101346460808_death-for-one-side-love-nurse-body-today-buried_secvpfகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா (வயது 21).

விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்தார். இவரை பூதாமூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த தனசேகர் (20) ஒருதலையாக காதலித்தார். அவரது காதலை புஷ்பலதா ஏற்கவில்லை.

கடந்த 31-ந் தேதி புஷ்ப லதா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனசேகர் வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொள்ளாத புஷ்பலதாவின் சுடிதாரை பிடித்து இழுத்து தாக்கி அவமானப்படுத்தினார்.

இதில் மனமுடைந்த புஷ்பலதா வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் 9 நாள் தீவிர சிகிச்சைக்குப்பின் பரிதாபமாக இறந்தார். நேற்று மதியம் அவரது உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

புஷ்பலதா இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

புஷ்பலதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புஷ்பலதாவின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் புஷ்பலதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து விருத்தாசலத்திலும் புஷ்பலதாவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புஷ்பலதாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் அசோக்குமார், தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், செல்வமகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் விருத்தாசலத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அவர்கள் மனு கொடுக்க சென்றனர். அவர்களிடம் கோட்டாட்சியர் செந்தில்குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவரிடம், புஷ்பலதாவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புஷ்பலதாவின் தாய்க்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடியிருக்க அரசு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக கோட்டாட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் புஷ்பலதாவின் உடலை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை விருத்தாசலத்தில் இருந்து புஷ்பலதாவின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு புஷ்பலதாவின் உடலை அவரது அண்ணன் சண்முகம் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்து புஷ்பலதாவின் உடல் விருத்தாசலத்துக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஏனாதி மேட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் புஷ்பலதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பூதாமூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

புஷ்பலதா உடல் விருத்தாசலம் கொண்டு செல்லப்பட்டதையொட்டி அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பூதாமூர்மேடு, ஏனாதிமேடு, பாலக்கரை ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புஷ்பலதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் தனசேகர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 12 வயது சிறுமிக்கு சித்ரவதை: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை…!!
Next post விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்…!!