பீட்ரூட்டில் இத்தனை மகத்துவங்களா…!!
பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறத்திலிருக்கும் பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
சத்துக்கள்
சதவீதம்
தண்ணீர்
87.7%
புரோட்டின்
17%
கொழுப்பு
0.1%
தாதுக்கள்
0.8%
நார்ச்சத்து
0.9%
கார்போஹைட்ரேட்
0.8%
சத்துக்கள்
மில்லி கிராம்
கால்சியம்
18 மில்லி கிராம்
பாஸ்பரஸ்
5.5 மில்லி கிராம்
இரும்புச்சத்து
10 மில்லி கிராம்
வைட்டசின் சி
10 மில்லி கிராம்
இதில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.
மேலும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
பீட்ருட்டின் மகத்துவங்கள்
*பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
*பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
*தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.
*பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
*பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
*பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
*பீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு, அதனை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
*கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
*பீட்ரூட்டை மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.
பீட்ருட் கூட்டு
முதலில் பீட்ரூட்டை சதுர வடிவமாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
கடலை பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.
பிறகு கடலை பருப்பை சேர்த்து கிளறவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இறக்கினால் பீட்ரூட் கூட்டு ரெடி.
பயன்கள்
*ரத்தசோகையை குணப்படுத்தும்.
*மலச்சிக்கலைப் போக்கும்.
*பித்தத்தைக் குறைக்கும்.
பீட்ரூட் துவையல்
பீட்ரூட்டை தோல் சீவி நன்கு கழுவி விட்டு துருவியோ அல்லது பொடியாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் போடவும்.
பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் பீட்ரூட்டை சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி, தேங்காய் துருவல், உப்பு, புளி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான பீட்ரூட் துவையல் தயார்.
பயன்கள்
*அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.
*சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சு பொருட்களை போக்கிவிடும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating