5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் வவுனியாவில் வைத்து கைது ;ஒரு தொகை பணமும் மீட்பு…!!
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் கடந்த புதன் கிழமை(7) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றினுள் கடந்த புதன் கிழமை(7) இரவு உற்சென்ற குறித்த நபர் குறித்த மரக்காலையினுள் வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
–
இந்த நிலையில் குறித்த மரக்காலையின் உரிமையாளர் நேற்று(8) வியாழன் காலை தனது வர்த்தக நிலையத்தில் பெரும் தொகை பணம் திருடப்பட்டமை குறித்து உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் தற்காலிக தலைமையக பொறுப்பதிகாரி பிரசன்ன பரனமன்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையில்,உப பொலிஸ் பரிசோதகர் கே.வினோத்,பொலிஸ் கொஸ்தபில்களான திஸாநாயக்க(29956) சிவராஜ்(53207),சரவணண்(64646), ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித விசாரனைகளின் போது திருட்டுச்சம்பவம் இடம் பெற்று 24 மணி நேரத்தில் குறித்த நபரை நேற்று(8) வியாழக்கிழமை இரவு வவுனியா வைரவர் புளியங்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
-இவரிடம் இருந்து மிஞ்சிய 4 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரனைகள் இடம் பெற்று வருவதாகவும்,விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் மேலும் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating