கடற்படை பஸ், முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து…!!

Read Time:1 Minute, 56 Second

கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று முற்பகல் வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

முச்சக்கர வண்டியில் பயனித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது முச்சக்கர வண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஜவர் பயனித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை! நெல்லையில் பயங்கரம்…!!
Next post 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் வவுனியாவில் வைத்து கைது ;ஒரு தொகை பணமும் மீட்பு…!!