இளம் வயதில் தாடி, மீசை வளர்த்த இந்திய சீக்கிய பெண்: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்…!!

Read Time:2 Minute, 57 Second

201609082121272284_uk-sikh-enters-guinness-records-as-youngest-female-with_secvpfஇங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி பெண் ஹர்னாம் கவுர் என்பவருக்கு பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் தாக்கியுள்ளது.

இதனால் 24 வயது பெண் கவுருக்கு முகம், மார்பு, கை என உடலின் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளது. இதனால் அவர் உண்மையாகவே ஆள் அடையாளம் மாறிவிட்டார். கவுருக்கு இந்த நோய் அவரது 11 வயதில் தாக்கியது. அப்போதே முடிகள் முளைக்க தொடங்கின. இதனால் ஆண் போல் தோற்றம் அளிப்பதாக கருதி வெளியே தலையே காட்டாமல் இருந்துள்ளார்.

மேலும் தனது முகம் மற்றும் மற்ற பகுதிகளில் வளரும் முடியினை அவ்வபோது சேவிங் செய்து வந்துள்ளார். இருப்பினும் முடி வளர்வது தொடர்ந்தது. இதனால் பெரும் அவதிக்குள்ளானார்.

பின்னர் தனது 16 வயதில் சேவிங் செய்வதை நிறுத்திவிட்டார். அவர் தனக்கு கடவுள் அளித்த வரம் இது என்று தொடர்ந்து சீக்கியர்கள் போல் முடியினை வளர்க்க தொடங்கிவிட்டார். தற்போது சாலையில் சாதரணமாக நடந்து செல்கிறார். தற்போது கவுர் பெரிய தாடி, மீசையுடன் காட்சி அளிக்கிறார்.

கவுரின் முடிவுக்கு முதலில் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது முடிவை ஏற்றுக் கொண்டனர். இதனால் கவுர் எந்த ஒரு பயமும் இன்றி தனது மனது படி முடியை வளர்க்க தொடங்கி விட்டார்.

இந்நிலையில், இளம் வயதில் தாடி, மீசை வளர்ந்த பெண் என்பதற்காக ஹர்னாம் கவுர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள்ளார்.

”மீசை தாடி வளர்த்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது மிகவும் சிறுமையாக இருக்கிறது. இது என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கவுர் தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!
Next post மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…!!