இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகம்…!!

Read Time:2 Minute, 23 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது என இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டிலும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் மட்டும் புற்று நோய் தொடர்பிலான 12000 பேர் பதிவாகின்றனர்.இதில் அதிகளவானவர்கள் மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்களாவர்.

மஹரமகவில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளிலும் மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்களில் அதிகளவானவர்கள் 30 முதல் 40 வயது வரையிலானவர்களாகும்.

உரிய உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை, செயற்கை உணவுப் பொருட்களை அதிகளவில் உட்கொள்ளல் போன்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு இந்த நோய் பற்றி போதிய தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது.

பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் ஓர் மாற்றத்தை அவதானித்தால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலை ஒன்றுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது உசிதமானது என டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்பது வருடங்களின் பின் மாட்டிக் கொண்ட மரணதண்டனைக் கைதி…!!
Next post சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு விவகாரம்! இருவர் விடுதலை…!!